மீன் பஜ்ஜி

மீன் பஜ்ஜி 

தேவை :-
நெத்திலி மீன்                                 -10
கடலை மாவு                                   -300 கிராம் 
மஞ்சள் தூள்                                   - 1 டேபிள் ஸ்பூன் 
இஞ்சி /பூண்டு பேஸ்ட்                - 1 டீ ஸ்பூன் 
உப்பு                                                   - தேவையான அளவு 

செய்முறை :-
முதலில் மீனை நன்றாக கழுவி கொள்ளவும். பிறகு ஒவ்வொரு மீனாக தலையை நறுக்கி வயிற்றை லேசாக கீறி கவனமாக மீன்கள் உடையாமல் எலும்பை உருவி எடுக்கவும் 
எலும்பு நீக்கிய மீன்களை மீண்டும் ஒருமுறை கழுவி நீரை வடித்து விடவும் பிறகு அதில் இஞ்சி வெள்ளை பூண்டு பேஸ்டை இட்டு உருட்டி மிக்ஸ் செய்யவும்.பிறகு மஞ்சள் தூளை தூவி அது போல் உருட்டி மிக்ஸ் செய்யவும் பிறகு உப்பை தேவையான அளவு இட்டு மீண்டும் உருட்டி மிக்ஸ் செய்யவும் 
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி காய விடவும் வாணலி சூடானதும் மீன்களை அதில் போட்டு 5 நிமிடம் வறட்டவும்.அடுப்பை அனைத்து வாணலியை இறக்கி அதிலுள்ள வறட்டிய  மீன்களை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும் 
இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்துக்கொள்ளவும் பஜ்ஜிக்கு மாவு பிசைவதுபோல் அதில் தேவையான அளவு நீர் ஊற்றி பிசைந்து வைக்கவும்.லேசாக உப்பு சேர்த்துக்கொள்ளவும்  
வாணலியை சுத்தமாகி விட்டு அதை அடுப்பில் ஏற்றவும்.நெருப்பை மீடியமாக எரிய விடவும் 
அதில் எண்ணெய் ஊற்றவும் 
எண்ணெய் காய்ந்து வரும் போது மீன்களை ஒவ்வொன்றாக பஜ்ஜி மாவில் புரட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும் 
பொரித்த மீன் பஜ்ஜியை கஞ்சி வடிப்பானில் போட்டு எண்ணெய்யை வடிய விடவும் 
பிறகு ஒரு தட்டில் அடுக்கி வைத்து பரிமாறவும் 
டீ வேளைக்கு மிகவும் ருசியான ஒரு அயிட்டம் இது 
 

Comments