பால் அல்வா
பாலில் இனிப்பு என்பது நமக்கு பால் கோவாதான் தெரியும் ஆனால் பாலில் சுவைமிக்க அல்வாவும் செய்ய முடியும் என்பதற்கு இதோ கீழே
தேவை :-
1.சுத்தமான பசும் பால் --4 கப்
2.சீனி ---1/2 கப்
3.ஏலக்காய் பொடி --- ஒரு சிட்டிகை
முதலில் அடிப்பாகம் கெட்டியான ஒரு வாணலியில் பாலை கொட்டி நெடிய ஜுவாலையில் காய்ச்ச வேண்டும்
பால் பொங்கி வரும் போது ஜுவாலையை குறைத்து விட்டு பாலை இளம் தீயில் வேக விடவும்.ஒரு அரை மணி நேரம் இடையிடையே பால் தீய்ந்தது விடாமல் கரண்டியை விட்டு கிளறிக்கொண்டு இருக்கவும்.இந்த நிலையில் பால் இறுக ஆரம்பிக்கும்.இப்போது சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கிளறிக்கொண்டே இருக்கவும் ஏலக்காய் பொடியையும் இடவும்
சர்க்கரை முழுதும் கரைந்த பின் பால் இறுகிய நிலையில் தீயை அணைத்துவிடவும் .
அல்வாவை வாணலியில் இருந்து வேறொரு தட்டிற்கு மாற்றவும்
ஆற விடவும் ஆறிய பின் குளிர்பெட்டியில் வைத்து குளிர்ந்து கெட்டியான பின்
துண்டுகளாக விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறவும்
டீ வேளையிலும் விருந்துகளிலும் பரிமாற்ற ஏற்றது

Comments
Post a Comment