திடீர் இனிப்பு -பேரீச்சம்பழ பாயசம்
தேவை
1.பசும்பால் 1 லிட்டர்
2.சேமியா (வெர்மிசெல்லி) 50 கிராம்
3.பேரிச்சம்பழம் (மீடியமாக உலர்ந்தது) 100 கிராம்
4.கிசுமிசு 25 கிராம்
5.பாதாம் 50 கிராம்
6.முந்திரி பருப்பு 25 கிராம்
7.ஏலக்காய் 5
8.இலவங்க பட்டை 2
9.கருப்பிட்டி 1 மூடி
10.நெய் 50 மில்லி
செய்முறை
பாதாமை உரலில் இட்டு பொடி செய்து கொள்ளவும் .
பேரீச்சம்பழங்களை கொட்டை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்
கருப்பிட்டியை சிறுதுண்டுகளாக்கிய பின் உரலில் இட்டு பொடியாக்கி கொள்ளவும்
சேமியாவை ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் சிறிது பெரும வைத்து நீரை வடித்து விடவும்
மிக்ஸியில் பால்,நறுக்கிய பேரீச்சை,பொடித்த பாதாம் பருப்பு ஆகிய வற்றை போட்டு மிக்ஸியை ஒரு பத்து நிமிடம் ஓடவிடவும்
பிறகு ஒரு பாத்திரத்தில் நெய்யய் ஊற்றி அடுப்பில் காய விடவும்
நெய் காய்ந்ததும் அதில் முந்திரி,கிமிஸ்,தட்டிய ஏலக்காய் மற்றும் இலவங்க பட்டைகளை போட்டு ஒரு நிமிடம் கரண்டியால் கிண்டி விடவும்
முந்திரி பொன் நிறத்தில் வரும்போது மிக்ஸியில் அரைத்த பால் பேரீச்சம்பழ கலவையை அதில் ஊற்றி ,கிளறி விடவும்
கலவை கொதி நிலைக்கு வரும் பொழுது சேமியாவை அதில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும் சேர்க்கும் போது கரண்டியை கொண்டு கிண்டியபடி இருக்க வேண்டும்
பாயசம் பதமாக கம்பி பதத்திற்கு வரும் பொது வெல்ல பொடியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கரண்டியால் நன்றாக கிண்டிக்கொண்டு இருக்கவும்
பாயாசம் கெட்டி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பாயாசத்தை இறக்கி விடவும்
இதுவே பேரீச்சம்பழ பால் பாயாசம் ஆகும்
விசேஷ நிகழ்ச்சிகளில் விருந்தினர்களுக்கு சுவையுடன் பரிமாற்ற ஏற்றது

.

Comments
Post a Comment