திடீர் பலகாரம் -வேர்க்கடலை இனிப்பு போண்டா
தேவை :
1.உடைத்த வேர்க்கடலை --100 கிராம் (உரித்தது)
2.நாட்டு சர்க்கரை (அச்சு வெல்லம்) -- 50 கிராம்
3.தேங்காய் துருவல் --- ஒரு கப்
4.மைதா --- 500 கிராம்
5.சீனி --- அரை கப்
உடைத்த வேர்க்கடலையை தோலுரித்து வைத்து கொள்ளவும்
ஒரு சிறு உரலில் வேர்க்கடலை நாட்டு சர்க்கரை ஆகியவற்றை இடித்து கொறு கொறுவென பதத்தில் உரலில் வந்தபிறகு அதோடு தேங்காய் துருவலையும் சீனியையும் போட்டு மீண்டும் மை போல் இடித்து ஒரு பாத்திரத்தில் கொட்டி எடுத்துக்கொள்ளவும்
மைதா மாவை வேறொரு பாத்திரத்தில் இட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பும் போட்டு போண்டா பதத்திற்கு பிசைந்து வைக்கவும்
வேர்க்கடலை சர்க்கரை கலவையை சிறு உருண்டைகளாக பிடித்து அந்த உருண்டையை சுற்றி குழைத்த மைதாவை உருண்டை பிடிக்கவும்
இப்படி உருண்டை உருண்டைகளாக பிடித்து வைத்து பின் ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி அடுப்பில் ஏற்றவும்
எண்ணெய் கொதிநிலைக்கு வந்த பிறகு போண்டா உருண்டைகளை அதில் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்
சல்லடை சோறு வடிக்கும் தட்டில் போண்டாக்களை இட்டு எண்ணெய் வடிய வைக்கவும்
இது டீ வேளையில் சாப்பிட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்
Comments
Post a Comment