மட்டன் கட்லட்

மட்டன் கட்லட்

 

தேவை 

1.ஆட்டிறைச்சி (எலும்பு நீக்கியது)                       --- 1/2 கிலோ 
2.வெங்காயம்                                                                --- 1
3.மிளகாய் தூள்                                                             --- 1 தேக்கரண்டி 
4.மஞ்சள் பொடி                                                             --- 1 தேக்கரண்டி 
5.இஞ்சி/ பூண்டு பேஸ்ட்                                              --- 1 தேக்கரண்டி 
6.பச்சை மிளகாய்                                                          --- 4 
7.கொத்தமல்லி இலைகள்                                        --- 1 கொத்து 
8.நறுக்கி பொடித்த வெள்ளை பூண்டு                   --- 4 பல் 
9.ரொட்டி தூள்                                                                 --- 1/2 கப் 
10.உப்பு மிளகு பொடி                                                    --- தேவையான அளவு 
11.உருளை கிழங்கு                                                       --- 500 கிராம் 

செய் முறை 

உருளைக் கிழங்கை குக்கரில் மசித்து தோல் உரித்து மாவாக பிசைந்து   வைத்து கொள்ளவும் 
இறைச்சியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும் 
அகண்ட வாயுடைய ஒரு பாத்திரத்தில் 1/4 தண்ணீர் எடுத்துக்கொள்ளவும் அதில் இறைச்சி துண்டுகள், இஞ்சி பூண்டு பேஸ்ட் ,மிளகாய் தூள்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு மிளகு  ஆகியவற்றை போட்டு கலவை   பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி மீடியம் நெருப்பில் நன்றாக வேக வைக்கவும் 
நீரை முழுவதும் வற்ற விட்டு கொஞ்சமும் ஈரமில்லாமல்  ட்ரை ஆக்கவும் 
நன்றாக ஆறவிடவும் 
வெங்காயம் பச்சை மிளகாய் கொத்துமல்லி, இஞ்சி பூண்டு  ஆகியவற்றை நறுக்கி வைக்கவும் 
ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காயவிடவும் எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு கொத்து மல்லி   கலவையை அதில் இட்டு பொரித்து எடுக்கவும் 
பிறகு மசித்து பிசைந்த உருளை கிழங்கு பொரித்த வெங்காயம் மிளகாய் கொத்துமல்லி ஆகியவற்றை வேகவைத்த இறைச்சியுடன் கலந்து நன்றாக பிசையவும்
பிறகு பிசைந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து அவற்றை ஒவ்வொன்றாக இரண்டு உள்ளங்கைகளை இடையிலும் வைத்து கட்லெட் வடிவத்தில் தட்டவும்
ஒரு பாத்திரத்தில் ரொட்டி தூளை போடவும்
ஒவ்வொரு கட்லெட்டாக ரொட்டி தூளில் புரட்டி எடுத்து வேறொரு தட்டில்  கட்லெட்டுகளை பரப்பி வைக்கவும்
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றவும்
எண்ணெய் காய்ந்து வரும் பொது தட்டில் பரப்பி வாய்த்த கட்லெட்டுகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்
சாப்பிடுவதற்கு மிகவும் சுவையான பலகாரம் இது

 





Comments