முட்டை கை வீசனம்
வீட்டில் திடீரென்று விருந்தினர்கள் வந்து விட்டால் அவர்களை உபசரிக்க வீட்டில் ஒன்றும் இல்லையா கவலை வேண்டாம் இந்த சுவீட்டை முயற்சிக்கலாமே.நேரமும் மிச்சம் ஒரு புதுமையான சுவீட்டாகவும் இது இருக்கும்
தேவை :5 அல்லது ஆறு முட்டைகள்
செய்முறை :- முட்டைகளை உடைத்து மிக்ஸியில் இட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும் பிறகு அதை பாத்திரத்தில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்
ஒரு வாணலியில் நெய் அல்லது எண்ணெயை ஊற்றி அடுப்பில் ஏற்றவும்
எண்ணெய் கொதித்து வரும்வரை காத்திருக்கவும்
கைகளில் சுத்தமான க்ளவுஸை போட்டுக்கொள்ளலாம்
எண்ணெய் கொதிநிலைக்கு வந்ததும் அடித்து வைத்த முட்டை பாத்திரத்தை இடதுகையில் தூக்கி வாணலிக்கு அருகில் கொண்டுபோய் பிடித்துக்கொண்டு வலது காய் ஐந்து விரல்களையும் முட்டையில் முக்கி வடியும் முட்டை நூல் இழைகளை எண்ணெய்யில் சுழற்சியாக இட்டு இடியாப்பம் போல் பொரித்து எடுக்கவும்
இப்படி முட்டை தீரும் வரைக்கும் இடியாப்பங்களை ஒவ்வொன்றாக பொரித்து ஒரு தட்டில் அடுக்கவும்
இதை விருந்தினருக்கு பரிமாறும்போது சர்க்கரையை தனியாக வேறு ஒரு பாத்திரத்தில் இட்டு பரிமாறவும்
விருந்தினர்கள் தேவை என்றால் சர்க்கரையை வீசனத்தின் மீது தூவியோ அல்லது சர்க்கரையை தவிர்த்தோ அவர்கள் விருப்பம் போல் சாப்பிடலாம்
எந்த பறவையின் முட்டையிலும் இதை செய்யலாம்
ஆனால் மஞ்சள் கரு வுடைய சுத்தமான நாடு கோழி முட்டையில் இதை செய்தால் பார்க்க கவர்ச்சியாகவும் ருசியாகவும் சத்துள்ளதாகவும் இருக்கும்
Comments
Post a Comment